விடுதியை கையளிக்காத வைத்தியர் அர்ச்சுனா: போராட்டத்தில் குதிக்கவுள்ள அரச வைத்திய அதிகாரிகள்

Sri Lanka Doctors Dr.Archuna Chavakachcheri
By Shadhu Shanker Jul 18, 2024 02:52 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்(Archuna) மீது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையினால் சட்ட நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதாவது மத்திய சுகாதார அமைச்சிற்கு அழைக்கப்பட்டுச் சென்றுள்ள போதிலும் இன்று வரை வைத்தியர்களுக்குரிய வைத்தியசாலை தங்குமிட விடுதியை மீள ஒப்படைக்காததால் இந்த நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும், நாம் வலிந்து தொழிற்சங்கப் போராட்டத்திற்குத் தள்ளப்படுவோம் என எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலை : மக்களின் எழுச்சியை நலிவடையச் செய்த தமிழ் அரசியல்வாதிகள்

சாவகச்சேரி வைத்தியசாலை : மக்களின் எழுச்சியை நலிவடையச் செய்த தமிழ் அரசியல்வாதிகள்

சட்ட நடவடிக்கைகள்

மேலும் அந்த செய்தி குறிப்பில், “சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சமீப காலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளைத் தொடர்ந்து முன்னைய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த 7ம் திகதி அன்று மத்திய சுகாதார அமைச்சினால் மத்திய சுகாதார அமைச்சிற்கு அழைக்கப்படுவதாக எழுத்து மூலம் தெரியப்படுத்தியும் அதனை அவர் ஏற்காமலும், புதிதாக நியமிக்கப்பட்ட வைத்திய அத்தியட்சகருக்கும், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலையைத் தோற்றுவித்ததுடன் நோயாளருக்குரிய சேவையை வழங்குவதில் பல சிரமங்களை ஏற்படுத்தியிருந்தார்.

விடுதியை கையளிக்காத வைத்தியர் அர்ச்சுனா: போராட்டத்தில் குதிக்கவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் | Dr Archuna Chavakachcheri Hospital Union Strike

இதன் தொடர்ச்சியாக மற்றைய வைத்தியர்களால் முறையாக திணைக்களத்திற்குக் கட்டணம் செலுத்திப் பாவித்து வந்த அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட வைத்தியசாலை தங்குமிட விடுதிகளை வற்புறுத்திப் பெற்றுக்கொண்டதுடன் மட்டுமல்லாது அவர் இவ் வைத்தியசாலையின் ஊழியரல்லாத போதும் இதுவரை விடுதியை ஒப்படைக்க மறுத்து வருகின்றார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இதனால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரது சாவகச்சேரிக் கிளை நேற்றைய தினம் (17) காலை 8 மணி தொடக்கம் தொழிற்சங்கப் போராட்டத்தை அறிவித்திருந்தும் பொதுமக்களின் நலன் கருதியும், மேலதிகாரிகளின் வாக்குறுதிகளையும் கருத்தில் கொண்டு தொழிற்சங்கப் போராட்டத்தைப் பிற்போட்டு வழமையான நோயாளர் சேவைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம்.

மேலும் சுகாதார அமைச்சர் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் தற்போது வைத்திய அத்தியட்சகராகப் பொறுப்பேற்றுள்ள வைத்தியரே சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எனத் தெளிவாகக் கூறியுள்ளமை எமக்கு மன வலிமையையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் வழமை போல் நோயாளர்களது சேவைகளைச் செவ்வனே இடையூறின்றி வழங்குவதற்கு ஏதுவான சூழ்நிலைகளைத் தோற்றுவித்துள்ளது. இருப்பினும் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மத்திய சுகாதார அமைச்சிற்கு அழைக்கப்பட்டுச் சென்றுள்ள போதிலும் இன்று வரை வைத்தியர்களுக்குரிய வைத்தியசாலை தங்குமிட விடுதியை மீள ஒப்படைக்கவில்லை.

இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வைத்தியர் அர்ச்சுனாவின் சம்பள மிகுதியை தர மறுக்கும் கேதீஸ்வரன் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

வைத்தியர் அர்ச்சுனாவின் சம்பள மிகுதியை தர மறுக்கும் கேதீஸ்வரன் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

தொழிற்சங்கப் போராட்டம்

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா திணைக்கள முடிவுகளையும், சட்ட நடவடிக்கைகளையும் உதாசீனப்படுத்தி மீண்டும் வைத்தியசாலைக்குள் உட்பிரவேசித்து வைத்தியசாலை நடவடிக்கைகளிற்குப் பங்கம் விளைவிக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவாரானால் வைத்தியசாலை மற்றும் அங்கு கடமையாற்றும் வைத்தியர்களின் நலன் கருதி அங்கு அமைதியைப் பேணி சுமூகமான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் எமது உறுப்பினரது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நாம் வலிந்து தொழிற்சங்கப் போராட்டத்திற்குத் தள்ளப்படுவோம் என்பதனைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.

விடுதியை கையளிக்காத வைத்தியர் அர்ச்சுனா: போராட்டத்தில் குதிக்கவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் | Dr Archuna Chavakachcheri Hospital Union Strike

ஒட்டு மொத்த சமூகத்தின் நலன் கருதியே நாம் இவ் முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏழு நாளில் 7 உலக அதிசயங்கள்: கின்னஸ் சாதனை படைத்த எகிப்திய நபர்

ஏழு நாளில் 7 உலக அதிசயங்கள்: கின்னஸ் சாதனை படைத்த எகிப்திய நபர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

08 Apr, 2022
மரண அறிவித்தல்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கொக்குவில் கிழக்கு

08 Apr, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

06 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025