மது போதையில் சாரத்தியம்: இ.போ.ச சாரதிக்கு விளக்கமறியல்
Sri Lanka Police
Mannar
Sri Lanka
By Shadhu Shanker
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை குடிபோதையில் ஓட்டி சென்ற சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் பேருந்து நிலையத்தில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணிகளுடன் சென்ற பேருந்தின் சாரதி குடிபோதையில் வாகனத்தை செலுத்திய நிலையில் மன்னார் போக்குவரத்து காவல்துறையினரால் நேற்றைய தினம்(18) மாலை மன்னார் வைத்தியசாலை வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
விளக்கமறியலில்
இந்த நிலையில் குறித்த சாரதி குடிபோதையில் வாகனத்தை செலுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே சாரதியை இன்றைய தினம்(19) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்திய போது குறித்த சாரதியை எதிர்வரும் (23) திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்