ஒகஸ்ட் மாதத்திற்கு முன் விநியோகிக்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்கள்
தற்போதைக்கு தேங்கிக் கிடக்கும் விண்ணப்பங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்துக்கு முன்னதாக விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் நேற்று(26) கலந்து கொண்டு உரையாற்றிய போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் வெகுசனத் தொடர்பு அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெகுவிரைவில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் டிஜிட்டல் மயப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அரச நிறுவனங்களில் கூடுதல் வருமானம் ஈட்டும் நிறுவனமாகவும், துறைமுகம், சுங்கத் திணைக்களம் போன்ற முக்கிய பல நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டதுமான நிறுவனமாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் குறிப்பிடத்தக்க சேவையொன்றை ஆற்றி வருவதாகவும் அமைச்சர் பந்துல தொடர்ந்தும் சுட்டிக் காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |