சிறிலங்கா இராணுவம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
சிறிலங்காவில் சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுதல் உள்ளிட்ட இணையவழி முறையின் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை மோட்டார் வாகன திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு சிறிலங்கா இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை 01 அன்று எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின்படி, 2021 ஜனவரி 01 முதல் சிறிலங்கா இராணுவம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதன்படி, 10 இலட்சத்து 22,763 சாரதி உரிமங்களும், 24 இலட்சத்து 34,467 தற்காலிக சாரதி உரிமங்களும் சிறிலங்கா இராணுவத்தினால் அச்சடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்காலிக சாரதி உரிமங்கள்
சாரதி உரிமம் அச்சடிக்கும் பணி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனம் ஒன்று வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில் தடையின்றி மேற்கொள்ளப்பட்டது.
இலங்கையில் அச்சடிக்கும் அட்டைகளின் பற்றாக்குறை காரணமாக தற்காலிக சாரதி உரிமங்கள் பாதுகாப்புக் குறியீடு மற்றும் ஒரு வருட செல்லுபடியாகும் காலத்துடன் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனத் திணைக்கள ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.