குவைத் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் : தீக்கிரையான எரிபொருள் தாங்கிகள்
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கிகள் மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலின் போது எரிபொருள் தாங்கிகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள எரிபொருள் தாங்கிகள் மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குவைத் அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆளில்லா விமான தாக்குதல்
இன்று (08) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விமான நிலைய வளாகத்தில் உள்ள எரிபொருள் களஞ்சிய முனையத்தை இலக்கு வைத்து இந்த ஆளில்லா விமான தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதலினால் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் சம்பவ இடத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருவதாக குவைத் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் இந்தத் தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கப் படைகள் பயன்படுத்தும் முக்கிய விநியோகப் புள்ளிகளில் ஒன்றான குவைத் விமான நிலையம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |