இஸ்ரேல் விமான நிலையத்தை துல்லியமாக குறிவைத்த ஹவுதிகள்
Israel
Yemen
Israel-Hamas War
By Sumithiran
ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பினர் ட்ரோன்கள் வீசி நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் விமான நிலையம் சேதம் அடைந்தது.
இன்றையதினம்(07) ஹவுதி அமைப்பினர் ஏராளமான ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனை இஸ்ரேலுக்கு வெளியே இடைமறித்து தாக்கி அழிவித்து விட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
மூடப்பட்டது விமான நிலையம்
அதேநேரத்தில் ஒரு ட்ரோன் மட்டும் எலியாட் சர்வதேச விமான நிலையம் மீது விழுந்ததாக தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அந்த விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஹவுதிகள் எதுவும் தெரிவிக்கவில்லை

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்