ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை : வெளியானது விசாரணை அறிக்கை
Jaffna
Journalists In Sri Lanka
By Sumithiran
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட அமைப்பினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று(07) இடம்பெற்ற நிகழ்வில் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது.
அறிக்கையின் முதல் பிரதி
இதன்போது நிமலராஜனின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
யாழ் ஊடக அமையத்தின் தலைவர் குமாரசாமி செல்வக்குமார் குறித்த அறிக்கையின் முதல் பிரதியை நிமலராஜனின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் குறித்த அறிக்கையின் பிரதிகள் கலந்துகொண்ட ஏனையோருக்கும் வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், ஊடகத் துறை சார்ந்தவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என்போர் கலந்துகொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |












31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி