போதைப்பொருள் பாவனையால் என்ன நடக்கும்: உறைய வைக்கும் பிண்ணனி
இலங்கையில் போதைப்பொருள் பாவனையானது சமூகத்தின் பல பரிமாணங்களை பெரிதும் பாதித்து வருகின்றது.
குறிப்பாக, இளம் தலைமுறை, கல்வி, குடும்ப உறவுகள் மற்றும் சமூக நம்பிக்கைகள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
இலங்கையின் பல பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதனுடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத வணிகம் மற்றும் குற்றச் செயல்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இதனால் சமூகம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு பெரும் சவால்களை எதிர்கொள்ளும் இக்கட்டான ஒரு சூழல் உருவாகியுள்ளது.
இதற்கிடையில், அரசாங்கம் மற்றும் சமூக அமைப்புகள் இதற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இதில், போதைப்பொருள் எதிர்ப்பு திட்டங்கள், விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் தடுப்பு சட்டங்கள் ஆகியவை நாட்டை இந்தப் பாதிப்புகளிலிருந்து காப்பாற்ற முக்கிய பங்கு வகிக்கின்றன.
இருப்பினும், உபயோகிக்கும் தரப்பினருக்கு போதைப்பொருளின் தீங்கு மற்றும் விளைவுகள் குறித்து முழுமையான விளக்கம் இல்லாததுடன் பலர் போதை பொருளுக்கு தொடர்ந்து அடிமையாகி வரும் அபாய சூழல் உருவெடுத்துள்ளது.
இந்தநிலையில், போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புகள், எதிர்காலத்தில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் வைத்தியர் சாம் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது லங்காசிறியின் இன்றைய நேருக்கு நேர் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |