இலங்கையில் குவியலாக கிடக்கும் 3 தொன் ஹெரோயின் - அழிக்க வழியில்லாமல் தவிக்கும் அரசு
Sri Lanka Police
Sri Lanka
By pavan
காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட சுமார் 3 தொன் ஹெரோயின் நீதி மற்றும் இரசாயன பரிசோதனைத் திணைக்களத்தில் குவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்புகளை 1000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எரிக்க வேண்டும் என்றும், ஆனால் அதற்கான இடம் இல்லாத காரணத்தால் அவை கையிருப்பு சேகரிக்கப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தேசிய பாதுகாப்பு துறை கண்காணிப்பு குழுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆழ்கடலில் மூழ்கடிக்க முடிவு
இந்த ஹெரோயின் கையிருப்புகளை ஆழ்கடலில் மூழ்கடிக்க முடியும் என்றும், ஆனால் அதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
2020ஆம் ஆண்டு முதல் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளே இவ்வாறு குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்