யாழ். பிரபல்ய பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம்! மயங்கி விழுந்த மூன்று மாணவர்கள்: மருத்துவ அதிகாரி வெளியிட்ட தகவல்
யாழ். மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றில் அண்மையில் மூன்று மாணவர்கள் மயங்கி விழுந்ததாகவும் பரிசோதனையின் போது அவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்தாகவும் யாழ். போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் தெரிவித்தார்.
இவ்வாறான போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு பாடசாலைகளின் பங்களிப்புப் போதாது என்றும் மருத்துவ அதிகாரி மேலும் கூறியுள்ளார்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது.
எனினும், ஆசிரியர்கள், அதிபர்கள் தமது பாடசாலைகளில் நற்பெயருக்குக் களங்கம் வந்துவிடக்கூடாது என்பதால் அது குறித்த தகவல்களை வெளிப்படுத்தாது மறைக்கின்றனர்.
பிரபல பாடசாலை சம்பவம்
இந்தச் செயல் கொலைக்குச் சமனானது. இனி இந்த விடயங்களை வெளிப்படையாகப் பேசவேண்டும். ஏனெனில் நிலைமை மோசமாகிவிட்டது.
யாழ். மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றில் அண்மையில் மூன்று மாணவர்கள் மயங்கி விழுந்தனர்.
பரிசோதனையின்போது அவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்தனர் என தெரியவந்தது. பின்னர் பாடசாலையின் நற்பெயரைக் கருத்தில்கொண்டு சில விடயங்கள் மூடிமறைக்கப்பட்டுவிட்டன. இந்த நிலைமை கவலையளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.