யாழில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 37 வயதான பெண் கைது! (படம்)
Jaffna
By pavan
யாழ்.தெல்லிப்பழை - வீமன்காமம் பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்று முன்தினம்(22.01.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
தெல்லிப்பழை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் 37 வயதான குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
காய்ச்சுவதற்கான உபகரணங்கள்
இதன்போது 40 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா 15,750 மில்லி லீட்டர் கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்கள் காவல்துறையினரால் மீட்க்கப்பட்டுள்ளன.
மேலும், சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்