வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவோர் தொடர்பில் வெளியான தகவல்
வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 48 குற்றவாளிகளில் கிட்டத்தட்ட 30 பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக தேசிய நாளிதழ் ஒன்று இணையத்தளம் மூலம் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது அந்த செய்தியானது, இலங்கையில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காரணம் ட்ரக் மாபியா எனப்படும் இவ்வாறான போதைப்பொருள் கடத்தல்களானது, பெரும்பாலும் பணத்தை அடிப்படையாக வைத்தே மேற்கொள்ளப்படுகின்றது.
அரசியல்வாதிகளின் தலையீடு
மேலும், இவ்வாறு வெளிநாடுகளில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் வெளிப்படும் பட்சத்தில் இதில் உள் செயற்படும் அனைவரும் மாட்டிக்கொள்ளும் தருணம் வெகு தொலைவில் இல்லை எனவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், குறித்த போதைபொருள் கடத்தல்களில், பிரபல அரசியல்வாதிகளின் தலையீடு காணப்படுவதையும் அந்த செய்தி மறைமுகமாக எடுத்துக்காட்டுகின்றது.
அவர்களில் ஐவர் நேரடியாக இலங்கைக்கு போதைப்பொருள் கொண்டு வருவதில் ஈடுபட்டுள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட குழுவைக் கைது செய்ய SAAC நாடுகளால் கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும், துபாய் மாநிலத்தின் பல சிறப்பு உளவாளிகளும் அதற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்தி அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.