சிறையில் உள்ள கணவனுக்காக ஹெரோயின் கடத்திய மனைவி
Sri Lanka Police
Sri Lanka
By pavan
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவருக்காக சுமார் 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய மனைவியை சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (01) களுத்துறை சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்ணை சிறைச்சாலை அதிகாரிகள் சோதனையிட்டபோதே காற்சட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிராம் 48 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.
காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

இதனையடுத்து குறித்த பெண்ணையும் போதைப்பொருளையும் களுத்துறை வடக்கு காவல் நிலையத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை களுத்துறை வடக்கு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி