வடக்கின் பாடசாலைகளுக்கு சவாலாகியுள்ள உயிர்கொள்ளி போதைப்பொருள்! முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை
வடக்கில் உள்ள பாடசாலைகளின் உளவள ஆசிரியர்களுக்கு பயிற்சிச் செயலமர்வுகளை நடத்தி அவர்கள் ஊடாக மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வுச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (08.07.2025) நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
உயிர்கொல்லி போதைப்பொருள்
வடக்கு மாகாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லலுகிறது.
இதனால் உடனடியாக சிகிச்சை மற்றும் மறுவாழ்வு வழங்கும் நிலையத்தை ஆரம்பிக்க வேண்டும்
பாடசாலைகளிலுள்ள உளவள ஆசிரியர்களுக்கு பயிற்சிச் செயலமர்வுகளை நடத்தி அவர்கள் ஊடாக மாணவர்களுக்கு விழிப்புணர்வுச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
அத்துடன் சமூக மட்டத்திலும் அத்தகைய விழிப்புணர்வுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



