விரைவில் இலங்கை வரும் IMF பிரதிநிதிகள் குழு!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாக தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மதிப்பாய்வு தொடர்பில் விவாதிக்கும் நோக்கில் குறித்த குழு இலங்கை வரவுள்ளது.
நிர்வாகக் குழு
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மதிப்பாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் அதனை அங்கீகரிப்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி நிர்வாகக் குழு கூட திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், இலங்கையின் விரைவான நிதியுதவிக்கான கோரிக்கை காரணமாக குறித்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இலங்கை அரசாங்கத்தால் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட் தொடர்பில் குறித்த குழுவினர் கலந்துரையாட எதிர்ப்பார்த்துள்ளதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |