கொழும்பில் இசைக்கருவிக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட போதைப்பொருள் மீட்பு
கொழும்பு - கொட்டாஞ்சேனையிலுள்ள வீடொன்றில் காவல்துறையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது பாரிய தொகை போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சுமித்ராராம மாவத்தை பகுதியில் இசைக் கருவி ஒன்றுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது ஒரு கிலோ கிராமுக்கும் அதிக நிறையுடைய ஐஸ் ரக போதைப் பொருள் மற்றும் 500 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
தொலைபேசிகள் மீட்பு
அத்துடன் குறித்த வீட்டிலிருந்து சில தொலைபேசிகள் மற்றும் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் சிம் அட்டைகள் என்பவற்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இதேவேளை வெளிநாட்டில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் நபர் ஒருவர் இதன்போது காவல்துறையினருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
எவ்வாறாயினும் குறித்த நபரை காவல்நிலையத்துக்கு வருமாறு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பான முழுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |