கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் : நீதியமைச்சர் வெளியிட்ட தகவல்
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை கொண்டு செல்வதை கண்காணிப்பதற்கு முறையான சட்டங்கள் இல்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஒப்புக்கொண்டுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,
பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளமை
“அண்மைக்காலமாக சோதனையின் போது கைப்பற்றப்பட்ட சில போதைப்பொருட்கள் பனடோல் தூள் அல்லது மாவு என அடையாளம் காணப்பட்ட நிலையில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பான பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தான் சோதனைக்காக ஒப்படைக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லை. காவல்துறையினரால், போதைப்பொருள் அல்லது மாவு தான் கைப்பற்றப்பட்டதா மற்றும் இடமாற்றங்களுக்கு இடையில் அது குளறுபடி செய்யப்பட்டதா என்பதை நாங்கள் உறுதியாக கூற முடியாது.
கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள்
எவ்வாறாயினும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை களஞ்சியப்படுத்துகையில் எந்தவிதமான மோசடி நடவடிக்கைகளும் இடம்பெறாமல் தடுக்குமுகமாக கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை கொண்டு செல்லும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினருடன் கலந்துரையாடப்பட வேண்டும்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |