200 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள்! பின்னணியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்
இந்தியாவின் டெல்லியில் 50 கிலோ எடையுள்ள 200 கோடி ரூபாய் பெறுமதி கொண்ட சூடோ பெட்ரைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்வதற்கு முயற்சி
குறித்த போதைப்பொருளை கடத்தி வந்த 3 பேரிடம் அண்மையில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்த கடத்தல் குழுவின் மூளையாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரே செயற்பட்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனவே அவரை கைது செய்வதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
45 முறை போதைப்பொருள் கடத்தல்
எனினும், குறித்த திரைப்பட தயாரிப்பாளர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை தேடும் பணியில் டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவோடு, போதைப்பொருள் தடுப்பு பிரிவும் இணைந்து ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை கடந்த 3 வருடங்களில் கிட்டத்தட்ட 45 முறை போதைப்பொருள்களை சர்வதேச சந்தைகளுக்கு கடத்தியிருப்பதாகவும், அவற்றின் மதிப்பு 2 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் எனவும் கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்கள் வாக்கு மூலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |