மது போதையில் மணமகன் செய்த செயல் - மணமகள் எடுத்த அதிரடி முடிவு!
இந்தியாவின் அசாம் மாநிலம் நல்பார் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமணம் ஒன்று, மணமகனின் செயலால் நிறுத்தப்பட்டுள்ளது.
திருமண மேடையில் மணமகன் மது போதையில் உறங்கியதால், மணமகள் திருமணத்தை உடனடியாக நிறுத்தியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்படும் வழங்கப்பட்டுள்ளது.
மது போதையில் மணமகன்
திருமண சடங்குகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயம், மது போதையில் மணமேடைக்கு மணமகன் வந்துள்ளார்.
மது போதையில் இருந்த மணமகன் மணமேடையில் நிலையாக உட்கார முடியாமல், அந்த இடத்திலேயே படுத்து உறங்கியதால் திருமண நிகழ்வில் பெரும் குழப்பநிலை தோன்றியுள்ளது.
இதனால், மணப்பெண் மற்றும் அவரது வீட்டார் குறித்த திருமணத்தினை நிறுத்தியுள்ளனர்.
அதே சமயம், குறித்த நிகழ்வில் மணமகனின் தந்தை உட்பட மணமகனின் 90 வீதமான உறவினர்கள் மது போதையில் இருந்ததாக காவல்துறையில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
மணப்பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்! 6 நாட்கள் முன்
