முல்லைத்தீவில் மதுபோதையில் வந்த காவல்துறையினர் மாணவர்கள் மீது தாக்குதல்

Sri Lanka Police Human Rights Council Mullaitivu
By Sumithiran Feb 04, 2023 06:19 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் பாடசாலை மாணவர்கள் இருவர் மீது மதுபோதையில் வந்த மூன்று காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும் இது தொடர்பாக முல்லைத்தீவு உதவி காவல்துறை அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இதற்கு நீதியை பெற்றுத் தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

  இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

 நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

முல்லைத்தீவில் மதுபோதையில் வந்த காவல்துறையினர் மாணவர்கள் மீது தாக்குதல் | Drunken Police Attacked Students

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் (02) இரவு நண்பர் ஒருவரின் பிறந்த தின கொண்டாட்டத்தை நிறைவு செய்து சுமார் 300 மீற்றருக்குள் இருந்த தமது வீட்டுக்கு பதினைந்து வயதுடைய மாணவர்கள் இருவர் சென்றுள்ளனர்.

இதன்போது தேவிபுரம் ஆ பகுதியில் இருந்து முச்சக்கர வண்டியில் மதுபோதையில் வருகை தந்த புதுக்குடியிருப்பு காவல்நிலையத்தின் மூன்று காவல்துறை அதிகாரிகள் மாணவர்களை மறித்து அவர்களிடம் இருந்த தொலைபேசிகளை பறித்து விட்டு இருவரும் போதைப் பொருள்கள் பாவித்துவிட்டு வருகிறீர்களா என கேட்டு இருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

  காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்ட போது மாணவர்கள் கத்திய சத்தம் கேட்டு பெற்றோர் வந்தபோது காவல்துறையினர் குறித்த இடத்தை விட்டு தப்பித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

புதுக்குடியிருப்பு காவல் நிலையம்

முல்லைத்தீவில் மதுபோதையில் வந்த காவல்துறையினர் மாணவர்கள் மீது தாக்குதல் | Drunken Police Attacked Students

இந்நிலையில் மாணவர்களை அழைத்துக் கொண்டு புதுக்குடியிருப்பு காவல் நிலையம் சென்ற பெற்றோர் அங்கு அவர்களுக்கு நீதி கிடைக்காத நிலையில் மாணவர்களை புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அதனை தொடர்ந்து மாணவர்கள் இருவரும் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று (03) பெற்றோர் முல்லைத்தீவு உதவி காவல்துறை அத்தியட்சகர் காரியாலயத்தில் சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை

முல்லைத்தீவில் மதுபோதையில் வந்த காவல்துறையினர் மாணவர்கள் மீது தாக்குதல் | Drunken Police Attacked Students

  இருப்பினும் இதுவரை நீதியான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை எனவும் மாறாக காவல்துறையினரின் அழுத்தங்களால் வைத்தியசாலையில் இருந்து ஒரு மாணவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மற்றைய மாணவருக்கு எலும்பில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் சிகிச்சையில் உள்ளதாகவும் தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தருமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு பெற்றோரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016