டுபாய் குடியிருப்பில் தீ விபத்து - தமிழகத்தை சேர்ந்த 2 பேர் பலி
Dubai
India
Accident
By Pavan
டுபாயின் அல்ராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கட்டிடத்தின் 4-வது மாடியில் தீப்பிடித்தது. பின்னர் தீ மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால் கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது.
கட்டிடத்துக்குள் தீ மற்றும் புகை சூழ்ந்ததால் மக்கள் வெளியேறாமல் சிக்கினர். தீயணைப்பு படையினர் மற்றும் மீட்டு குழுவினர் அங்கு விரைந்து வந்து கட்டிடத்தில் இருந்தவர்களை வெளியேறினர்.
இந்தியர்கள்

சுமார் 2 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் 16 பேர் பலியானார்கள். இதில் 4 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்தது.
தமிழகத்தை சேர்ந்த 2 ஆண்கள், கேரளாவை சேர்ந்த தம்பதி ஆகியோர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி