50,000 அமெரிக்க டொலர் கோரி வெளிநாட்டு நிறுவனமொன்று தாக்கல் செய்த மனு நிராகரிப்பு
இலங்கை வர்த்தகர்கள் இருவர், தமக்கு 50,000 அமெரிக்க டொலர் வழங்கவேண்டும் என்று கோரி துபாய் நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த மனு நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
துபாயின் யூரோ கட்டிடத்தில் அமைந்துள்ள வணிக நிறுவனம், இலங்கையின் ஜிக்கர் காசிம் மற்றும் அவரது மகன் மொஹமட் ஷகீல் காசிம் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.
பிரதிவாதிகளின் கோரிக்கை
தமது இரண்டு தரப்புக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட வர்த்தக நிதி ஒப்பந்தத்தின் கீழ் பிரதிவாதிகளிடமிருந்து 50,000 அமெரிக்க டொலர்களை மீட்டுத்தரவேண்டும் என்று மனுதாரரான துபாய் நிறுவனம் கோரியிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகளின் கோரிக்கையின் பேரில் பொருட்கள் வழங்கப்பட்டதாக மனுதாரரின் சாட்சி தெரிவித்த போதிலும், அதனை நிரூபிப்பதற்கான ஆவண ஆதாரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என நீதிபதி குறிப்பிட்டார்.
எனவே நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி மனுதாரரின் மனுவை நிராகரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |