மகளிருக்கான ஐபில் கிரிக்கெட் போட்டியில் புறக்கணிக்கப்பட்ட இலங்கை வீராங்கனை
இந்திய மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அதபத்துவை எந்த அணியும் வாங்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நேற்று(09) மும்பையில் நடைபெற்றது.
இந்த ஆண்டு, இந்திய மகளிர் பிரீமியர் லீக் ஏலத்திற்கு 165 வீரர்கள் முன்மொழியப்பட்டனர், அதில் 30 வீராங்கனைகளை போட்டியில் சேரும் 5 அணிகள் வாங்க வேண்டும்.
தலைமைப் பயிற்சியாளர்
இந்த ஆண்டுக்கான ஏலத்தில் இலங்கை அணித்தலைவர் சாமரி அத்தபத்து மற்றும் இனோகா ரணவீர ஆகியோர் நாணயப் பிரிவில் இந்திய ரூபா 30 இலட்சம் பெறுமதியுடன் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
எனினும் குறித்த போட்டியில் சிறந்த வீராங்கனையான சமரி அத்தபத்துவை வாங்காதது குறித்து பலரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சார்லோட் எட்வர்ட்ஸ் கூறுகையில், சமரி வாங்கப்படாதது அதிர்ச்சியளிக்கிறதாக கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |