இலங்கையில் பாரிய அரிசி நெருக்கடி - நாளையதினம் வெளிவரவுள்ள விசேட அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Fried rice
By Sumithiran
பாரிய அரிசி நெருக்கடி
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரிசி நெருக்கடி தொடர்பில் விசேட அறிவிப்பொன்று நாளையதினம் வெளியிடப்படவுள்ளது.
பிரபல அரிசி ஆலை உரிமையாளரும் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருமான வர்த்தகர் டட்லி சிறிசேன இந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நாளை (18) ஏற்பாடு செய்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு
இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நாளை காலை 10.00 மணிக்கு கொழும்பு ரமடா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
தற்போதைய அரிசி நெருக்கடி தொடர்பில் டட்லி சிறிசேன விசேட அறிவிப்பை வெளியிட தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

