உணவு நெருக்கடியால் எவரையும் பசியோடு வாடக்கூடாது என்பதே எனது கொள்கை - வலியுறுத்தும் ரணில்!

Ranil Wickremesinghe Prime minister Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Food Crisis
By Kalaimathy Jun 17, 2022 12:14 PM GMT
Report

உணவு நெருக்கடியால் எவரையும் பசியோடு வாடக்கூடாது என்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

உணவு நெருக்கடியானது எதிர்காலத்தில் 4 மில்லியன் முதல் 5 மில்லியன் இலங்கையர்களை நேரடியாகப் பாதிக்கக் கூடியதாக இருந்தாலும், அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். உணவு நெருக்கடியைத் தணிக்கும் முயற்சிகளை ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தலைமையிலான குழுவொன்றை நியமிக்கவும் பிரதமர் பணித்துள்ளார்.

இந்தக் குழுவினால் தயாரிக்கப்பட்ட திட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் வெளிப்படுத்த தாம் விரும்புவதாகவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் உள்ள 336 பிரதேச செயலகங்களின் இலக்குகளை அபிவிருத்தி செய்வதற்கும் அவற்றை அடைவதற்கும் தலைமைத்துவத்தை வழங்குவதற்காக 225 பிரிவுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் எஞ்சியவை அமைச்சுகள் மற்றும் தனியார் துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடமும் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ். இதற்காக பிரதேச செயலகங்களில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள முன்மொழியப்பட்டுள்ளது. மீனவ மக்களுக்கு உணவு, எரிவாயு மற்றும் எரிபொருள் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு அதிகாரிகளுக்கு  பணிப்புரை விடுத்துள்ளார்.

குறிப்பாக சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்களில் உணவுப் பாதுகாப்பிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

பிராந்திய ரீதியில் போட்டி நிறைந்த சந்தையை உருவாக்கும் நவீன விவசாய முறைக்கான நடுத்தர மற்றும் நீண்ட காலத் திட்டத்தின் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

முன்னாள் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், திகாம்பரம், ரிஷாட் பதியுதீன், நவீன் திஸாநாயக்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய ஆகியோருடன் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, நளின் பெர்னாண்டோ, ரமேஷ் பத்திரன மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில் தொண்டமானும் கலந்து கொண்டார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026