சஜித் தரப்பு அரசாங்கத்தை அமைத்தால்...! எட்டப்பட்டது இணக்கப்பாடு
ஐக்கிய மக்கள் சக்தி அடுத்த அரசாங்கத்தை அமைத்தால், செயற்படுத்தப்படும் பொதுவான குறைந்தபட்ச பொருளாதார திட்டங்களை டளஸ் அழகப்பெரும தரப்பு ஏற்றுக்கொள்ளும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
டளஸ் அழகப்பெரும தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவே இதற்கான இணக்கத்தை தெரிவித்துள்ளனர்.
பலதரப்பு முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் கூறுகிறார்.
டுவிட்டர் பதிவொன்றை இட்டு, இது குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.
Glad to note @DullasOfficial team lead by Prof GLP along w @charith9 @GodahewaNalaka and others came to complete agreement with the common minimum economic program if we form the next #SriLanka government. This is based on multiparty proposals compiled by @samarajiva #NMSJ.
— Harsha de Silva (@HarshadeSilvaMP) July 18, 2022
