தீக்கிரையாக்கப்பட்ட வீட்டை ஒரு மாதத்தின் பின்னர் பார்வையிடச் சென்ற எம்.பி
தீக்கிரையாக்கப்பட்ட வீடு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தீயினால் நாசமான அவரது வீட்டை நேற்று (10) காலை பார்வையிட்டார்.
கடந்த 9ஆம் திகதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், என பலரது வீடுகளும், உள்ளூர் அரசியல்வாதிகளின் வீடுகளும் தீயிட்டு சேதப்படுத்தப்பட்டன.
அநுராதபுரம் விமான நிலைய வீதியிலுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் வீடும் தீயிட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு மாதத்தின் பின்னர் பார்வை
சம்பவம் இடம்பெற்று ஒரு மாதத்தின் பின்னர் இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் அவரது குடும்பத்தினர் தீயினால் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் பிரதேச மகா சங்கத்தினர், உள்ளுர் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
எவ்வாறான தடைகள் வந்தாலும் பொசன் பௌர்ணமி தினத்தில் வருடாந்த அரிசி தஞ்சை உரிய வளாகத்தில் நடத்தப்படும் எனவும் திரு.துமிந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
