விண்வெளியில் இருந்து மாணவர்களுக்கு இணையவழி கற்கை வகுப்பு - சீனா புதிய முயற்சி
விண்வெளி ஆய்வகத்திலிருந்து சீனமாணவர்களுக்கு இணையவழி கற்கை வகுப்பு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் Shenzhou 13 விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு இணையவழி கற்கை வகுப்பு நடத்தியுள்ளனர்.
விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக விண்வெளி ஆய்வகத்திலிருந்து மாணவர்களுக்கு இணையவழி கற்கை வகுப்பு நடத்தப்பட்டது.
Shenzhou 13 என்பது சீனா தயாரித்துள்ள ஒரு விண்கலம் ஆகும். அதில் உள்ள விண்வெளி வீரர்களான ஜாய் ஜிகாங், வாங் யாப்பிங் மற்றும் யே குவாங்ஃபு ஆகியோர் மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளனர்.
டியாங்காங் நிலையத்தின் மையப்பகுதியான தியான்ஹேவிலிருந்து விண்வெளி வீரர்கள் இணையவழியில் தோன்றி பாடம் நடத்தியுள்ளனர்.
Shenzhou 13 விண்கலத்தின் கமாண்டர் ஜாய் ஜிகாங். விண்வெளியில் அணியக் கூடிய உடை குறித்து விளக்கியுள்ளார்.
புவி ஈர்ப்பு சக்தி இல்லாத விண்வெளியில் தரைச் சிதைவு ஏற்படாமலிருக்கும் வகையில் அந்த உடை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜிகாங் விளக்கினார்.
சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியத்தில் இருந்தபடி ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்வெளி வகுப்பில் கலந்துக்கொண்டனர்.