மின்னணு வாகன வருமான வரி உரிம சேவை இடைநிறுத்தம் : வெளியான அறிவிப்பு
நாட்டின் எட்டு மாகாணங்களில் மின்னணு வாகன வருமான அனுமதிப் பத்திர சேவை இன்று (25) முதல் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்சார வாகன வருமான வரி அனுமதிப் பத்திர முறையை (e-Revenue Licence) புதுப்பிக்கும் பணி காரணமாக இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இது குறித்து டிஜிட்டல் பொருளாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இச்சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கும்.
வழமைக்கு திரும்பவுள்ள சேவைகள்
இதன்படி மத்திய, வடமத்திய, வடமேல், தென், கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய 8 மாகாணங்களில் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இச்சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்.

பயனாளர்களுக்கு மேலும் வினைத்திறனான மற்றும் உயர்தர சேவையை வழங்கும் நோக்கிலேயே இத்தொழில்நுட்ப புதுப்பித்தல் மேற்கொள்ளப்படுகின்றது.
எனினும், எதிர்வரும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் இச்சேவைகளை மீண்டும் வழமை போல் பெற்றுக்கொள்ள முடியும்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |