வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறும் முறை தொடர்பில் வெளியான தகவல்
மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் (சிறிய ரக பேருந்துகள்) தவிர வேறு எந்த மாகாணத்தின் வாகனங்களுக்கும் தென் மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் அல்லது தென் மாகாணத்திலுள்ள எந்தவொரு பிராந்திய செயலகத்திலோ மின் - வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டமானது, நேற்றையதினத்திலிருந்து (03) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மின் - வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் முறையானது இதுவரை அந்தந்த மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்ததது.
மேலதிக கட்டணம்
இந்த நிலையில், மேல் தவிர்ந்த ஏனைய மாகணங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரத்தை தென் மாகாணத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
அத்துடன், தென் மாகாணத்தில் இருந்து வேறு மாகாணத்தின் வருமான அனுமதிப்பத்திரத்தை பெறுவதற்கு உரிமக் கட்டணத்திற்கு மேலதிகமாக 100 ரூபா கட்டணமாக அறவிடப்படும் என தென் மாகாண பிரதம செயலாளர் சுமித் அழககோன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |