"ஊழி" திரைப்படத்தை வெளியிடுவதில் இலங்கையில் இழுபறி! உலக நாடுகளில் பச்சை கொடி
ஈழத் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த இயக்குநர் ரஞ்சித் ஜோசப்பின் இயக்கத்தில் தமிழர் தாயகத்தில் ஈழத் தமிழர்களின் கதை சொல்லும் ஈழத் தமிழ் கலைஞர்களின் படைப்பான "ஊழி" திரைப்படம் இன்று (10) உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டடிருந்தது.
ஈழத் தமிழர்கள் மதியில் பெரும் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்த ‘ஊழி’ திரைப்படம் இன்றைய தினம் உலகம் முழுவதும் வெளியாகவிருந்த நிலையில், இலங்கையின் திரைப்பட தணிக்கை குழு இலங்கையில் இழுபறி நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகள் இந்த திரைப்படத்தின் காட்சிகளிலோ அல்லது கதையிலோ எந்தவிதமான வன்மங்களும் இல்லை என்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்க வேண்டிய படம் என்ற வகையில் பச்சை கொடி காட்டியுள்ள நிலையில், இலங்கை திரைப்பட தணிக்கை குழு மட்டும் இழுத்தடிப்பை செய்து வருகிறது.
உலகம் முழுவதும் அந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கான பச்சை கொடியை அந்தந்த நாடுகளின் தணிக்கை குழுக்கள் வழங்கி உள்ள நிலையில், ‘ஊழி’ என்கின்ற ஈழத் தமிழர்களின் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்றும் இனிவரும் நாட்களில் அடுத்தடுத்த காட்சிகள் திரையிடப்படும் என்றும் திரைப்பட குழு தெரிவித்துள்ளது.