கனடா பொதுத்தேர்தலில் யாருக்கு வெற்றி : வெளியான தகவல்
கனடாவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தற்போதைய பிரதமர் மார்க் கார்னி சார்ந்த லிபரல் கட்சிக்கு அதிக ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவில் அடுத்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போவது யார் என கேள்வி எழுந்துள்ளது.
லிபரல் கட்சி
இதற்காக வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த வாக்கெடுப்பில், கனடாவின் தற்போதைய பிரதமரான மார்க் கார்னி சார்ந்த லிபரல் கட்சிக்கு மக்களிடையே 43.7 சதவிகித ஆதரவு கிடைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 36.3 சதவிகிதமும், ஜக்மீத் சிங்கின் நியூ டெமாக்ரட்ஸ் கட்சிக்கு 10.7 சதவிகித ஆதரவும் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே நிலை தேர்தலிலும் எதிரொலிக்குமானால், மார்க் கார்னியின் லிபரல் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
