கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான மொட்டு கட்சி உறுப்பினர்
கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளரான டேன் பிரியசாத் என்பவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி சூடு
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இன்று (22) இரவு 9.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் டேன் பிரியசாத், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு, துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொரு நபர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியில் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
