அர்ச்சுனா எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
கொழும்பில் (Colombo) வைத்து நபர் ஒருவரை தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியமை தொடர்பில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை (Ramanathan Archchuna) நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்கவினால் இன்றைய தினம் (22.04.2025) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி பேஸ்லைன் வீதியில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கார் விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
வழக்கு விசாரணை
இதையடுத்து வாகனத்தில் இருந்தவரை தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக கிராண்ட்பாஸ் காவல் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்ததுடன், தாக்குதலில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் லசந்த அபேவர்தன இன்று நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
விசாரணைகளை பரிசிலித்த நீதவான், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
