பிள்ளையானின் கைதின் பின்புலத்தை அம்பலப்படுத்திய அநுர தரப்பு

Sri Lanka Police Anura Kumara Dissanayaka Pillayan Sri Lanka Nalinda Jayatissa
By Raghav Apr 22, 2025 03:30 PM GMT
Report

பிள்ளையானிடம் அவருக்கு எதிரான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் மாத்திரம் பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.

சில மாதங்களில் மீண்டும் ஜனாதிபதியாக ரணில்...!

சில மாதங்களில் மீண்டும் ஜனாதிபதியாக ரணில்...!

பிள்ளையானிடம் விசாரணை

தற்போது அவர் மீதான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பான சாட்சியங்கள் கிடைத்துவருகின்ற நிலையில் அது குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. 

பிள்ளையானின் கைதின் பின்புலத்தை அம்பலப்படுத்திய அநுர தரப்பு | More Allegations Against Pillayan Anura Gov

அது தொடர்பான முன்னேற்றம் எதிர்வரும் காலங்களில் காவல்துறையினால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிள்ளையானிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் பல சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாவதுடன், அவற்றில் சில சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாகும். 

சில குற்றச்சாட்டுகள் உயர் நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட வழக்குகளுடன் தொடர்புடையவையாகும். அவை தொடர்பில் விசாரிக்கப்படுகிறது. 

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நியமனம்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நியமனம்

கொலை வழக்கு

அதன்பிரகாரம் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சில கொலை வழக்குகளில் அவர்கள் எந்தவிதத்தில் தொடர்பை கொண்டிருந்தார்கள் என காவல்துறை விசாரித்துவருகிறது. 

பிள்ளையானின் கைதின் பின்புலத்தை அம்பலப்படுத்திய அநுர தரப்பு | More Allegations Against Pillayan Anura Gov

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை என்பது மிகவும் உணர்திறன் மிக்க விடயமாகும். அதில் கர்தினால் உள்ளிட்ட பல தரப்பினர் திருப்தியடையும் வகையில் பெறுபேறுகள் கிடைத்துவருகின்றன என கூறமுடியும்.

பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்தும் பொறுப்பு நீதிமன்றத்துக்கும், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கும் பாரப்படுத்தப்பட்டுள்ளது. 

நிச்சயமாக விசாரணைகள் முறையாக இடம்பெறுகின்றன என்ற உத்தரவாதத்தை வழங்க முடியும். எனவே, பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவதற்குச் சரியான திகதியைக் கூற முடியாது. 

பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்த வேண்டும் என பலர் குழப்பமடைந்தாலும், அரசாங்கத்துக்குக் குழப்பமடைய வேண்டிய தேவை இல்லை”என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். 

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: எதிர்க்கட்சிகளுக்கு ஏன் இவ்வளவு கவலை : அரசாங்கம் கேள்வி

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: எதிர்க்கட்சிகளுக்கு ஏன் இவ்வளவு கவலை : அரசாங்கம் கேள்வி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பிள்ளையானிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். 

இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட அமைச்சரவை பேச்சாளர், “பிள்ளையானை சந்தித்து வந்ததன் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அவர் எதுவும் கூறவில்லை என உதய கம்மன்பில கூறியிருந்தார். 

பிள்ளையானின் கைதின் பின்புலத்தை அம்பலப்படுத்திய அநுர தரப்பு | More Allegations Against Pillayan Anura Gov

எவ்வாறாயினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படும் போது இந்த வலையமைப்பு மற்றும் அதன் விசாலம் குறித்து அறிந்து கொள்ளமுடியும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அப்பாலான திகதிகளில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் கப்பம் கோரல்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சிறையிலிருந்த பிள்ளையான் இதில் தொடர்புபடவில்லை என மறுக்க முடியாது. கடந்த காலங்களில் பலர் சிறையிலிருந்து குற்றங்களை வழிநடத்திய வரலாறுகள் உள்ளன. 

எனவே, பிள்ளையான் இதன் பின்னணியில் உள்ளாரா? என்பது குறித்து விசாரணைகளில் தெரியவரும் எனவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கையில் உயிரிழந்த குழந்தை - சீயோன் தேவாலய நேரடி சாட்சியின் பகிரங்க வாக்குமூலம்

கையில் உயிரிழந்த குழந்தை - சீயோன் தேவாலய நேரடி சாட்சியின் பகிரங்க வாக்குமூலம்

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம்: செவ்வந்தி தொடர்பில் காவல்துறை வெளியிட்ட தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம்: செவ்வந்தி தொடர்பில் காவல்துறை வெளியிட்ட தகவல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

01 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024