கையில் உயிரிழந்த குழந்தை - சீயோன் தேவாலய நேரடி சாட்சியின் பகிரங்க வாக்குமூலம்
மட்டக்களப்பு (Batticaloa) - சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் குண்டுதாரியை தான் நேரில் பார்த்ததாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிழக்குமாகாண அமைப்பாளர் சங்கர் ஆரோக்கியா தெரிவித்துள்ளார்.
சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்ற போது நேரடியாக கண்ட காட்சிகளை விபரிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019 ஏப்ரல் 21ஆம் திகதி சீயோன் தேவாலயத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 80க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று நேற்றுடன் (21.04.2025) ஆறு வருடங்கள் கடந்த நிலையில் நாடு முழுவதும் சிறப்பு வழிபாடுகளும் இடம்பெற்றது.
இந்நிலையில், மட்டக்களப்பு - சீயோன் தேவாலயத்திலும் சிறப்பு ஆராதனை வழிபாடுகளும் இடம்பெற்றது.
சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிழக்குமாகாண அமைப்பாளர் சங்கர் ஆரோக்கியா மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள இணைப்பில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
