அமெரிக்காவால் உலகத்துக்கு ஏற்படபோகும் ஆபத்து: பாபா வாங்காவின் திடுக்கிடும் கணிப்பு
எதிர்கால தீர்க்கதரிசியான பாபா வாங்கா 2066 ஆம் ஆண்டில், அமெரிக்கா மிகவும் ஆபத்தான ஒரு ஆயுதத்தை உருவாக்கும் என்று அவர் கணித்துள்ளார்.
அத்துடன், இந்த ஆயுதம் உலக சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
1911 ஆம் ஆண்டில் பல்கேரியாவில் பிறந்த பாபா வாங்கா என்று அழைக்கப்படும் வான்ஜெலியா பாண்டேவா டிமிட்ரோவா, குழந்தையாக இருந்தபோது இயற்கை சீற்றத்தால் பார்வையை இழந்துள்ளார்.
பாபா வாங்காவின் கணிப்பு
ஆனால் பின்னர் எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் திறனை வளர்த்துக் கொண்டு ஏராளமான கணிப்புகளை கணித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் போதும் பெரும்பாலான மக்கள் பாபா வாங்காவின் கணிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள்.
ஏனெனில் எதிர்காலம் பற்றிய பாபா வாங்காவின் பல கணிப்புகள் நிஜமாக நடந்து மக்களை ஆச்சரியத்திற்கும், அதிர்ச்சிக்கும் ஆளாக்கியுள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாபா வங்கா கணித்த கணிப்புகள் இப்போது நிறைவேறுவது எப்படி என்பது இன்றும் புரியாத மர்மமாகவே உள்ளது.
அமெரிக்காவால் ஆபத்து
இந்நிலையில், அடுத்த 41 ஆண்டுகளில் அமெரிக்கா கண்டுபிடிக்கும் ஆயுதம் உலக அச்சுறுத்தலுக்கு வழிவகுக்கும் என்ற கணிப்பு தற்போது உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஆயுத விற்பனை மொத்தம் USD318.7 பில்லியனாக இருந்தது, இது முந்தைய ஆண்டை விட 29% அதிகமாகும்.
இது உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் 42% ஆகும். வரும் காலங்களில் இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
