தூக்கி வீசப்படும் பூமி - இது மட்டும் நடந்தால் மிகப்பெரிய ஆபத்து!
பூமி குறித்தும் சூரியக் குடும்பம் குறித்தும் ஆய்வாளர்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு ஆய்வுகளைச் செய்து வருகிறார்கள்.
அதன்படி சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சில பகீர் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது வரும் காலத்தில் பூமி சூரியனுடன் மோத அல்லது சூரியக் குடும்பத்தில் இருந்தே தூக்கிவீசப்படும் ஆபத்து இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது பூமி இருக்கும் சூரிய குடும்பத்தில் நமக்குத் தெரியாமலேயே ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.
சூரியக் குடும்பம்
அவை அனைத்தும் நமது வாழ்க்கையையே மாற்றக்கூடியவை என்பதால் இது குறித்த ஆய்வுகள் தொடர்ச்சியாகவே நடந்து வருகிறது.
இந்த நிலையில் பூமி மற்றும் சூரியக் குடும்பம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது வரும் காலத்தில் பூமியின் சுற்றுப்பாதை மாறக்கூடும் என்றும் அது மற்ற கிரகங்களின் பாதை அல்லது அவ்வளவு ஏன் சூரியனுக்குள் கூட வீசப்படலாம் என்றும் இந்த புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.
ஏற்கனவே சூரியன் 50 கோடி ஆண்டுகளில் அழியலாம் என்றும் அப்போது அது பூமியையும் அழித்துவிடும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அது நடப்பதற்கு இப்படிப் பூமி தூக்கியடிக்கப்படும் சம்பவம் நடக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பூமியின் ஸ்திரத்தன்மை
நமது சூரிய குடும்பம் அருகே கடக்கும் நட்சத்திரங்களால் பூமியின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து ஏற்படலாம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
நட்சத்திரம் (Passing star) முன்பு மதிப்பிட்டதை விட அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு நட்சத்திரம் சுமாராகச் சூரியனின் நிறை அளவுக்கு இருந்தால்.. அது ப்ளூட்டோவுக்கு வெளியே இருக்கும் நமது சூரிய மண்டலத்தின் எல்லையாகக் கருதப்படும் ஊர்ட் கிளைவுட்டை (Oort Cloud) கூட கணிசமாகச் சீர்குலைக்கக்கூடும் என்றும் இந்த ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
