செல்வத்தை அள்ளித்தரும் சிவப்பு குதிரை படம் : எந்த திசையில் வைத்தால் நன்மை தெரியுமா?
வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டில் சிவப்பு நிற குதிரைகள் படத்தை வைப்பது மிகவும் விசேஷமானது.
சிவப்பு நிற குதிரைகள் ஆற்றல், வெற்றி, புகழ் மற்றும் செல்வத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றன.
சிவப்பு நிற குதிரைகளின் புகைப்படத்தை வீட்டில் சரியான திரையில் வைத்தால் அந்த நபர் வாழ்க்கையில் பிரச்னைகளை சந்திக்க வேண்டிய அவசியமே இருக்காது என வாஸ்து சாஸ்திரம் தெரிவிக்கிறது.
சிவப்பு நிற குதிரை
வாஸ்து ரீதியாக வீட்டின் எந்த திசையில் சிவப்பு நிற குதிரைகளின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் தெற்கு திசை அக்னியுடன் தொடர்புடையது. இந்த திசை புகழ், செல்வாக்கு, ஆற்றல் மற்றும் ஆடையாளத்தை குறிக்கிறது.
இந்த திசையை செயல்படுத்தி நேர்மறை ஆற்றலை வரவழைக்க வாஸ்துவில் பல வழிகாள் உள்ளன. அதில் சிவப்பு நிற குதிரைகள் படம் வைப்பது சிறப்பானது.
கிடைக்கும் பலன்கள்
இது வாழ்க்கையில் சீரான வளர்ச்சி மற்றும் எல்லா தடைகளையும் கடக்க முடியும் என்பதை குறிக்கிறது.
மேலும், எக்காரணத்திற்கும் சிவப்பு குதிரை படத்தை வட கிழக்கு திசையில் வைக்க கூடாது. ஏனெனில் வாஸ்துவின்படி வட கிழக்கு திசை நீர் தொடர்புடையது.
இது அமைதி, ஆன்மிக மனநிலைக்கான திசையாகும். இது ஆரோக்கியம், வளத்திற்கான திசையாகும். சிவப்பு குதிரை நெருப்பை பிரதிபலிக்கிறது. எனவ சிவப்பு நிற குதிரைகள் புகைப்படத்தை இந்த திசையில் வைக்க கூடாது.
தெற்கு திசையில் சிவப்பு குதிரை படத்தினை வைப்பதால் கிடைக்கும் பலன்கள், சிவப்பு நிறம் நேர்மறையான ஆற்றலை ஈர்க்க கூடியது.
இது வீட்டிற்கு மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் கொண்டு வரும். குதிரை வெற்றி மற்றும் வளர்ச்சிப் பாதையின் குறியீடாகும். ஆகையால் சிவப்பு நிற குதிரைகள் புகைப்படத்தை தெற்கு திசையில் வைப்பது செய்யும் தொழிலில் வளர்ச்சியை அதிகரித்து வீட்டின் வளத்தை பெருக்கும்.
அதே போல கடன் தொல்லைகளில் இருந்து விடுபட சிவப்பு நிற குதிரை புகைப்படம் வாஸ்துவின்படி சிறப்பு வாய்ந்தது.

செம்மணியில் இருந்து ஐ.நா ஆணையாளரை திருப்பி அனுப்ப திட்டமிட்ட அரசு: முகத்திரையை கிழித்த அர்ச்சுனா எம்.பி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
