ஹட்டனில் மூன்று வீடுகள் மீது நிலச்சரிவு
Landslide In Sri Lanka
Floods In Sri Lanka
Hatton
By Jaso
கடந்த ஒன்பதாம் திகதி (09) பெய்த கனமழையைத் தொடர்ந்து, ஹட்டன், லோட்டஸ் எஸ்டேட்டில் மூன்று வீடுகள் மீது நிலச்சரிவு ஏற்பட்டதில் பேரழிவு நிகழ்ந்துள்ளது.
வீடுகளில் ஒன்றின் மீது நிலச்சரிவு ஏற்பட்டதில் ஒருவர் காயமடைந்து, சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏற்கனவே அபாயகரமான பகுதி
அப்பகுதி ஏற்கனவே அதிக அபாயத்தில் இருப்பதால், பாதிக்கப்பட்ட மூன்று வீடுகளில் வசிப்பவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நிலச்சரிவில் மூழ்கிய வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தற்போது உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்