மற்றுமொரு நாட்டில் இன்று அதிகாலை பதிவாகியுள்ள அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம்!
Earthquake
World
By Pakirathan
துருக்கி - சிரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து மேலும் சில நாடுகளில் தொடர்ச்சியாக நில நடுக்கங்கள் பதிவாகியவண்ணம் உள்ளது.
அந்தவகையில், சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியம் மற்றும் தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த நில நடுக்கம்
உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:37 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 7.2 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஜிகிஸ்தானின் முர்கோப் நகருக்கு மேற்கே 67 கிலோமீட்டர் தொலைவில், 20 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
மரண அறிவித்தல்