இலங்கைக்கு தென்கிழக்கே நிலநடுக்கம்
Sri Lanka
Earthquake
By Sumithiran
இலங்கையின் தென்கிழக்கு கடற்பகுதியில் இன்று ரிக்டர் அளவுகோலில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 1,260 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடல் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
பல இடங்களில் உணரப்பட்ட அதிர்வு
இலங்கையின் கொழும்பு, பத்தரமுல்ல, அக்குரஸ்ஸ, காலி உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
எவ்வாறாயினும், நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

