நேபாளத்தில் நிலநடுக்கத்தின் கொடூரம் : வீடின்றி பரிதவிக்கும் மக்கள்

Earthquake Nepal
By Sathangani Nov 06, 2023 06:15 AM GMT
Report

நேபாளத்தில் கடந்த 03ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 2 இலட்சம் பேர் வீடின்றி பரிதவிப்பதாகவும்  கடும் குளிரில் திறந்தவெளியில் தூங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேபாளத்தின் கர்னாலி மாகாணம் ஜாஜர்கோட் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஜாஜர்கோட், கிழக்கு ரூகம் மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளதுடன் 400இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இரு மாவட்டங்களிலும் பெரும்பாலான வீடுகள், கட்டிடங்கள் இடிந்துள்ளன.

அத்துடன் நிலநடுக்கம் இடம்பெற்ற பகுதிகளில் இதுவரை 159 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு செல்ல மக்கள் அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறையப்போகும் அத்தியாவசியப் பொருட்களின் விலை: அமைச்சர் வெளியிட்ட தகவல்

குறையப்போகும் அத்தியாவசியப் பொருட்களின் விலை: அமைச்சர் வெளியிட்ட தகவல்


திறந்த வெளியில் தூங்கினர்

சுமார் 2 இலட்சம் பேர் வீடு மற்றும் உடைமைகளை இழந்து திறந்தவெளியில் பரிதவிக்கின்றனர். நேபாளத்தில் குளிர் காலம் தொடங்கியுள்ளதவும் கடும் குளிரைப் பொருட்படுத்தாமல் கடந்த சனிக்கிழமை ஜாஜர்கோட், கிழக்கு ரூகம் மாவட்ட மக்கள் திறந்தவெளியில் தூங்கினர்.

நேபாளத்தில் நிலநடுக்கத்தின் கொடூரம் : வீடின்றி பரிதவிக்கும் மக்கள் | Earthquake Horrors In Nepal People Left Homeless

வீடுகளை இழந்த மக்களுக்காக நேபாள அரசு சார்பில் ஆங்காங்கே தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள போதிலும் அவை போதுமானதாக இல்லை.

நேபாள பிரதமர் பிரசண்டா தலைமையில் நேற்று (05) அமைச்சரவையின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

எரிவாயுவின் விலையை உயர்த்தப் போவதில்லை: லாஃப்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு

எரிவாயுவின் விலையை உயர்த்தப் போவதில்லை: லாஃப்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு


இதேவேளை கட்டிட இடிபாடுகளில் இருந்து கடைசி நபர் மீட்கப்படும் வரை மீட்புப் பணி தொடரும் என்று பிரதமர் பிரசண்டா உறுதிபடத் தெரிவித்தார்.

துணைப் பிரதமர் விஜயம்

நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2 இலட்சம் இழப்பீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

நேபாளத்தில் நிலநடுக்கத்தின் கொடூரம் : வீடின்றி பரிதவிக்கும் மக்கள் | Earthquake Horrors In Nepal People Left Homeless

மேலும் படுகாயம் அடைந்த அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்படும் எனவும் , அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் தலைநகர் காத்மாண்டுக்கு அழைத்து வரப்படுவர் என்று மூத்த அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

விருச்சிக ராசியினருக்கு அதிர்ஷ்டம் : இன்றைய நாளுக்கான ராசி பலன்

விருச்சிக ராசியினருக்கு அதிர்ஷ்டம் : இன்றைய நாளுக்கான ராசி பலன்


காத்மாண்டுவில் இருந்து ஜாஜர்கோட், கிழக்கு ரூகம் மாவட்டங்களுக்கு இலவச பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு இலவசமாக தொலைத்தொடர்பு சேவையும் வழங்கப்படுகிறது.

நேபாள துணைப் பிரதமர் நாராயண் நேற்று நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார். அப்போது வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தார்பாலின், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை அவர் வழங்கினார்.

சர்வதேச நாடுகள்  நிவாரண உதவி

நேபாள தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரேகா சர்மா, கூறும்போது, “நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான உணவு தானியங்கள், மருந்து பொருட்கள், நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

நேபாளத்தில் நிலநடுக்கத்தின் கொடூரம் : வீடின்றி பரிதவிக்கும் மக்கள் | Earthquake Horrors In Nepal People Left Homeless

இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நிவாரண உதவிகளை வழங்க முன்வந்துள்ளன.

நட்பு நாடுகள் உட்பட சர்வதேச நாடுகளின் நிவாரண உதவிகளை ஏற்றுக் கொள்ள நேபாள அரசு முடிவு செய்துள்ளது’’ எனத் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026