நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் :இலங்கையர்களுக்கு பாதிப்பா..!
நேபாளத்தில் நேற்று (03) இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அந்த நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
சுமார் 100 இலங்கையர்கள் நேபாளத்தில் வசித்து வருவதாகவும் தலைநகர் காத்மண்டு மற்றும் பொக்கராவில் தங்கியிருப்பதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை
எனினும் நிலநடுக்கம் ஏற்பட்ட நேபாளத்தின் மேற்கு பகுதியில் இலங்கையர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேற்கு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஒரு மணித்தியாலத்திற்குள் மேலும் 03 அதிர்வுகள்
நேற்று (03) இரவு 11.47 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது.
முதல் நிலநடுக்கத்தின் பின்னர் ஒரு மணித்தியாலத்திற்குள் மேலும் 03 அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.