மாலைதீவுக்கு அருகே நிலநடுக்கம்
Japan
Earthquake
Maldives
By Dilakshan
மாலைதீவுக்கு அருகே 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மாலைதீவின் தலைநகரான மாலேயில் இருந்து மேற்கே 896 கிலோமீற்றர் தொலைவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு்ள்ளன.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
ஜப்பான் நிலநடுக்கம்
இந்நிலையில், ஜப்பானில் கடந்த முதலாம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 242 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சேதமடைந்த கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி