சீனாவின் இரகசிய திட்டம் அம்பலம்: வெளிவந்த செயற்கை கோள் புகைப்படம்
பூட்டானின் வடகிழக்கு பகுதியில் ஆக்கிரமிப்பை மேற்கொள்வதற்கு சீனா திட்டமிட்டு வருவது செயற்கைகோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
உலக அளவில் அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் சீனா, ஆசியாவில் யாராலும் அசைக்க முடியாத வல்லமை பொருந்திய நாடாக உருவெடுக்க வேண்டும் என்ற கனவுடன் வலம் வந்து கொண்டிருக்கிறது.
அத்தோடு, தெற்காசிய நாடுகளை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் சீனாவிற்கு இந்தியா கடும் சவாலாக காணப்படுகிறது.
சீனாவின் முயற்சி
இந்நிலையில், தற்போது சீனா, பூட்டானில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது தெரியவந்துள்ளது.
அதன் போது, பூட்டானின் வடகிழக்கு பகுதியில் சட்ட விரோதமாக ஊடுருவ முயற்சி மேற்கொண்டு வருவது செயற்கை கோள் படங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.
சீனாவின் நோக்கம்
குறித்த படங்களில் பூட்டானின் கேன் பஜோங் பிராந்தியத்தில் உள்ள பேயுல் ஆற்று பள்ளத்தாக்கில் நகர குடியிருப்புகளை சீனா அமைத்து வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அத்தோடு, 8 லட்சம் மக்கள் மட்டுமே வாழ்கின்ற பூட்டானை சுரண்டி ஆக்கிரமிப்பதன் மூலம் இந்தியாவுக்கு பூகோள ரீதியாக நெருக்கடி கொடுக்க சீனா முயற்சிப்பதாக சர்வதேச வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |