ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Japan
Earthquake
Turkey Earthquake
By Vanan
கிழக்கு ஜப்பானின், ஹொக்டைடோ நகரில் இன்று(25) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில், 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை
இந்த நில நடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பசிபிக் கடல் பகுதியில் இருந்து 60 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஜப்பானின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் கட்டடங்களில் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதுடன் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
இதேவேளை இன்று துருக்கியின் மத்திய பகுதியிலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி