துருக்கியின் மத்திய பகுதியில் மற்றுமொரு நிலநடுக்கம்
துருக்கியின் மத்திய பகுதியில் மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
Nigde மாகாணத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 5.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளாக ஐரோப்பிய - மத்திய தரைக்கடல் நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கிலோமீட்டர் ஆழத்தில்
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை.
இதனிடையே, துருக்கி மற்றும் சிரியாவில் பெப்ரவரி 6 ஆம் திகதி 7.8 ரிக்டா் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,000-ஐ கடந்துள்ளது.
20 மில்லியன் பேர் பாதிப்பு
இந்த நிலநடுக்கத்தினால் துருக்கியில் 20 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிரியாவில் 8.8 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 5,30,000-க்கும் அதிகமானோர் துருக்கியை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.