ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் நிலநடுக்கம்!
India
Earthquake
Jammu And Kashmir
By Sathangani
இந்தியாவின், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் இன்று(17) அதிகாலை 3.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலநடுக்கம் 3.6 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை கடந்த ஜூன் மாதம் 13ஆம் திகதி தோடா மாவட்டத்தில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் உட்பட பல்வேறு கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்