ஹோர்முஸை நெருங்கும் இராணுவக் கப்பல்கள் தாக்கப்படும்! IRGC எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணையை அணுக முயற்சிக்கும் எந்தவொரு இராணுவக் கப்பல்களும் கடுமையாகவும் உறுதியாகவும் கையாளப்படும் என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை இன்று வெளியிட்ட விசேட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று காலை 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் , “ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் பதித்து வைத்துள்ள Minesweepersக்களை அமெரிக்கா அழிக்கத் தொடங்கும் என்றும், எங்கள் மீதோ அல்லது அமைதியான கப்பல்கள் மீதோ துப்பாக்கிச் சூடு நடத்தும் எந்தவொரு ஈரானியரும் நரகத்திற்குச் சிதறடிக்கப்படுவார்கள்!” என்றும் தெரிவித்தத்திருந்தார்.
இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை
இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை, வெளியிட்ட ஓர் அறிக்கையில், அந்த நீர்வழிப்பாதை திறமையான கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத்தின் கீழ் இருப்பதாகவும், தொடர்புடைய விதிமுறைகளுக்கு இணங்கும் பட்சத்தில், பொதுமக்கள் கப்பல்கள் பாதுகாப்பான போக்குவரத்திற்காக திறந்தே இருக்கும் என்று கூறியுள்ளது.

எனினும் ஏதேனும் ஒரு காரணத்தினால் ஹோர்முஸ் நீரிணையை அணுக முயற்சிக்கும் எந்தவொரு இராணுவக் கப்பலும் போர் நிறுத்த மீறலாகக் கருதப்பட்டு, கடுமையாகவும் உறுதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்று ஐ.ஆர்.ஜி.சி மேலும் கூறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |